என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐஎஸ் பயங்கரவாதம்
நீங்கள் தேடியது "ஐஎஸ் பயங்கரவாதம்"
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினியா பாசோவில் தேவாலயம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தாக்கிய துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாகினர். #churchattack
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினியா பாசோ. இங்குள்ள சவும் மாகாணத்தின் தலைநகர் டிஜிபோ. இதன் அருகில் உள்ள சிறிய நகரம் சில்காட்ஜி. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்குள்ள தேவாயலம் ஒன்றில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
பிரார்த்தனை கூட்டம் முடியும் தருவாயில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று தேவாயலத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் பாதிரியார், அவரது மகன்கள் இருவர் மற்றும் பிரார்த்தனைக்கு வந்த மூன்று பேர் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த 2016-ல் இருந்து மேற்கு ஆப்பிரிக்காவில் அல்-கெய்தா, ஐஎஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் தாக்குதலில் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் தொடர் தாக்குதல் நடத்த இருக்கிறார்களா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை புர்கினியா பாசோவின் கிழக்குப்பகுதியில் ஐந்து ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #churchattack
வங்காளதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை மேற்கொண்டபோது இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர். #twomilitantssuicide
டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது வீடு ஒன்றை சுற்றி வளைத்தது. பயங்கரவாதிகள் சுதாரித்துக்கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இருதரப்பு இடையே சண்டை நடைபெற்றபோது பயங்கரவாதிகளால் சமாளிக்க முடியவில்லை.
இறுதியில் பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர் என சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது கூறியுள்ளார். அவர்கள் யாரென்பதை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை அவசியமாகும். மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
இதற்கிடையே வீட்டின் உரிமையாளர், அவருடைய மனைவியை போலீஸ் கைது செய்துள்ளது. அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாமிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தற்கொலை செய்துக்கொண்டவர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. டாக்காவில் 2016-ம் ஆண்டு ஜூலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது படைகள் நடவடிக்கையை மேற்கொண்டது. தேசம் முழுவதும் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், பலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #twomilitantssuicide
சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். #SyriaIssue #Trump #Erdogan
வாஷிங்டன்:
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.
சிரியாவில் குர்திஷ் படையினர் வசம் உள்ள மன்பிஜ் நகரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு, இந்த பேச்சுவார்த்தை உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும்பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் தொலைபேசி வாயிலாக பேசினர். அப்போது, வடகிழக்கு சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில் எஞ்சியுள்ள பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதன் முக்கியத்துவம் குறித்து டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு சிரியா மற்றும் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு இலக்கை அடைவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அமெரிக்கா, துருக்கி இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்தனர்’ என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் மன்பிஜ் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #SyriaIssue #Trump #Erdogan
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த பிரான்ஸ் பெண்ணுக்கு ஈராக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
பாக்தாத்:
அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் மெலினா கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 7-மாதம் சிறை தண்டணை விதித்தது.
சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக கூறி அவருக்கு இத்தண்டணை வழங்கப்பட்டது. தண்டணை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேறி பிரான்சுக்கு செல்லவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த கோர்ட்டு ஈராக் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த மெலினாவுக்கு ஆயுள் தண்டணை விதித்தது. இந்த தண்டணையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக அவரது வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து ஆயுள் தண்டணை பெற்ற அவர் பிரெஞ்சு குடிமகன் என்ற நிலையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஏப்ரலில் ஜமிலா புடோடியூ (29) ஆயுள்தண்டனை பெற்றார்.
×

X